வெளியுலகில் எல்லா இடத்தை சென்று வென்றவர்கள் அரசர்கள்...
உள்ளே சென்று வென்றவர்கள் ஞானி...
அதனால் தான் அரசன் ஞானியிடம் சரண் புகுவான்...
தவம் கிடந்து மனம் ஆராய்ச்சி செய்தவர் பலர்...
ஆனால் அம்மனதிலும் பார்த்திராத இடம் ஒன்று உண்டு...
அது கடுந்தவத்திலும் அங்கு செல்ல இயலாது...
அந்த பயத்தில் பலரும் அந்த கரும் பக்கத்தை தவிர்த்தனர்...
பல வருடம் கழித்து ஒருவர் அந்த ஆழ் மனதை பரிசோதிக்க தவமிருந்தார்...
கண்களை மூடி
தீர்க்கமான முடிவு எனும் தீயினால் வேகம் கிளப்பி
வெளியுலக சிந்தனை எனும் எதிர் சக்தியை மீறி
மேல் மனம் விட்டு உள்ளே சென்றார்...
பல காலம் தன்னையே சுற்றிக் கொண்டிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக மனம் சுற்ற ஆரம்பித்தது...
மனம் என்பது ஒரு அரிய விஷயம்...
நாம் அதை அறிய அறிய அது இன்னும் அரிதாகிறது...
சங்கின் வெண்மையாய் ஒரு பக்கம் இன்பங்களும் ஆனந்தமும் நிறைந்த இடம் ...
காகத்தின் கருப்பு மறு பக்கம் துன்பங்களும் பிடிக்காத விஷயங்களும் .....
இன்னும் பல காலம் சக்கரம் போல் சுற்றிக்கொண்டு அருகே சென்று கொண்டிருந்தது ....
பல காலம் கழித்து ஆழ் மனதை நெருங்கியது... தெரியாத இடம் புரியாத சூழல் ...
தவம் முற்றிக் கொண்டு சென்றது...
ஆழ் மனதின் ஆழத்தை அடையும் முன்பு இருள் எனும் மாயை தன் வேலையை காட்டியது...
எங்கே இருக்கிறோம் என்று தவசிக்கு தெரியவில்லை ..
பல காலம் இந்த சலனத்தில் சிக்கி தவம் கலைந்தது...
கைக்கெட்டும் தூரம் சென்றும் கிட்டாததால் தவம் கலைந்து கண் திறந்தான் தவசி ....
கண் கலங்கினான் அந்த சிவன்..
மனமும் சந்திரனும் ஒன்று தான் ....
ஜெய்க்க வேண்டும் என்ற உந்து சக்தி இருக்கும் வரை...
மனம்/சந்திரன் அடைவேன் யான் ...
சந்திரயான்...