Colours of Life

Colours of Life
Stories of Life which we fail to see and feel

Thursday, 15 August 2019

தேடலும் சுதந்திரமும் சிற்றுளியும்



அத்தியாயம் - 1



2016 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் .

பொள்ளாச்சி அருகே ஒரு ஆற்றங்கரை ஓரம் உட்கார்ந்து கொண்டிருந்தான் ஒரு வாலிபன்.

ஆற்றில் நீர் சீராக ஓடிக்கொண்டிருந்தது. 

அந்த ரம்யமான காட்சியை முழுமையாக ரசிக்க முடியாமல் 
நீண்ட யோசனையோடு இருந்தான் அவன்.

படகோட்டி 

ஏய் தம்பி தனியாக உட்கார்ந்துகொண்டிருக்கிறாய் . நீ காலையிலே வேறு ஒரு படகிலே இந்த பக்கம் வந்தாய்  என்று அந்த  படகோட்டி கூறினான். உன்னை கூட்டிச்  செல்ல தான் வந்திருக்கிறேன். படகிலே ஏறு . இன்னும் சற்று நேரத்தில் மழை வந்துவிடும் போல் இருக்கிறது. அந்த பக்கம் செல்ல இது தான் கடைசி படகு. இனி நாளை தான் படகு சவாரி. மழையில் அந்த மகேசன் கூப்பிட்டாலும் எந்த படகும் வராது.   "  

என்று படகிலே வந்துகொண்டிருந்த  படகோட்டி கூறினான்.

ஏற மனமில்லாமல் ஏறினான் படகில். 

சவாரி ஆரம்பித்தது.  

படகோட்டி:
" ஏனப்பா அப்படி இருக்கிறாய் ? ஆறடி உயரம் முழுதும் துயரமாய் இருக்கிறாயே  ? "

அவன்:   
"துயரம் இல்லை. ஒரு தேடலின் தோல்வி  

படகோட்டி:   
" தேடும் பொருளின் இடம் தெரியவில்லையா 
அல்லது  
தேடலின் முயற்சி முடிந்ததா ? "

அவன்:      
" இரண்டும் இல்லை. தேடல் அகத்திலே. 
பொருள் எதுவென்று தெரியவில்லை . "

படகோட்டி:  
" தம்பி நான் அவ்வளவா படிக்காதவன். 
கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்களேன். "

அவன்

" அன்பாய் அம்மா
ஆதரவாய் மனைவி...
அருளாய் குழந்தை..
அழகாய் குடும்பம்...
அருமையான ஊர்...
உண்மையான் நண்பர்கள்...

நல்ல வேலை... 
போதுமான அளவு சம்பளம்..

காண வேண்டிய இடத்திற்கு பறந்து கூட்டிச் செல்ல கார்...

உறுதியான உடல்... 
தினமும் வெகு தூரம் காலையில் ஓடும் கால்கள்...

இன்னொரு உயிரின் துயரை பார்த்த உடன் 
துடிக்கும் இதயம்... 
கரையும் மனம்...

இவை எல்லாம் இருந்தும் 
ஏதோ குறைகிறது...

என்னுடைய ஒவ்வொரு வார இறுதியும் 
இந்த சமுதாயத்திற்கு ஒரு புது தொடக்கமாய் இருக்க 
கடவுளின் தாயமாய் உழைப்பு ...

இவை எல்லாம் செய்தும்
ஏதோ குறைகிறது...

தினமும் அதை தேடித்துக்கொண்டிருக்கும் மனம் ...

ஆழ்ந்த அமைதியிலும் அந்த நெருடல் தொடர்கிறது ...

எங்கு சென்றும் 
எவ்வித தியானத்திலும் 
எவ்வித உழைப்பிலும் 

அது அகப்படவில்லை

இல்லாத ஒன்றைத்  தேடிக்கொண்டிருக்கின்றேனா ??  

அப்பொருள் யாதென காணாமல் வாழ்க்கை முழுதும் தேடலாய் தான் இருக்குமோ ??  "

என்று கூறிக்கொண்டிருந்த பொழுதே 

படகோட்டி  
" தம்பி தம்பி நிறுத்துப்பா "
 என்று படகை ஆற்றின் நடுவிலே நிறுத்தினார்.

நீ தொடர்ந்து பேசியதில் எனக்கே மூச்சு வாங்கிவிட்டது".

வானம் கருக ஆரம்பித்தது. 

ஒரு பாடலுடன் படகை ஓட்டினான்  
"
இல்லாமை இல்லாமல் இவ்வுலகம் கிடையாது.

இல்லாமை இல்லாமல் நீ இருந்தும் , 

அதற்கு அடிமையாகாமல் போனாயே.

சுதந்திரமாய் நீ இருந்தும் மாயையின் தந்திரத்தால் சுருங்குகிறாயே .

சிற்றின்பத்தில்  நீ சிக்காமலும் பெரும் குழப்பம் அடைகிறாயே.

தேடல் தவத்தின் கடுமையை பொறுத்தே வரம் இருக்குமோ  ?

உன் தேடலின் வரம் ஒரு சிறு சிற்பம் என்றால் தகுமோ ?

கோயிலாய் வந்தால் அதை செதுக்க உன் இரு கைகள் போதுமோ  ? 

ஆயிரம் கைகள் வருமுன் உன் தலை சீராகுமோ  ?


அனைவரையும் கரை சேர்க்கும் என்னை எவன் கரை சேர்ப்பானோ.

உன்னை கண்டு நானும் குழம்பலானேனே .. 
"

அவன் அந்த பாட்டை குறுக்கிட்டு 
தெரியாதவனை கரை சேர்க்கும் உனக்கு 
நின் கரை தெரியாதா.
"

அதை கேட்ட படகோட்டி பின்வரும் வரிகளை பாடினான் மூன்று முறை . 


கரை சேர்க்கும் வேலை செய்வதால் தான் நான் அதனின் அடிமையோ 

அல்லது
     
    சுதந்திரமாய் நான் இருப்பதால்தான் மற்றவரை கரை சேர்க்கின்றேனோ  ? 
"

அந்த வாலிபன் அதை புரிந்து கொள்வதற்குள் கரை சேர்ந்தான் ..

இறங்க மனமில்லாமல் இறங்கினான் கரையில்... 

அவன் படகோட்டியிடம்  பணம் கொடுத்தான். 

பணத்தை சிரித்துக்கொண்டே  அந்த படகோட்டி வாங்கி  
"
       எண்ணிக்கை வேண்டாம் எனக்கு நின்  
       எண்ணங்கள் மட்டும் போதும் .

       தனவான்கள் நிரம்பிய இவ்வுலகிற்கு 
       குணவான்கள் தேவை நின் போல
 "
என்று பணத்தை அவன் சட்டை பாக்கெட்டில் வைத்தான்.

திரும்பவும் படகேறி பாடிக்கொண்டே கிளம்பினான் 


"   அனைவரையும் கரை சேர்க்கும் என்னை 
எவன் கரை சேர்ப்பானோ ....
"

அந்த பாட்டொலி மழையொலியில் கரைந்துகொண்டே சென்றது ...

அத்தியாயம் - 2

அதன் பிறகு சில மாதங்களுக்கு பிறகு அந்த வாலிபனும் சில நண்பர்களும் டீ கடையில் ஒரு செய்தித்தாழில் ஒரு சிறு விளம்பரம் பார்த்தனர் .

"தன்னார்வலர்கள் தேவை . தேனியில் நடைபெறும்  
Paralympic Swimming Competition – 2016
மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி 2016. 
"

சேவை என்றதும் அந்த நண்பர்கள் கூட்டம் வெல்லத்தைக்  கண்ட எறும்புகள் போல சுறுசுறுப்பாய் விண்ணப்பித்து சென்றனர்.

அந்த போட்டியின் போது கால், கை  குறைபாடுள்ளவர்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர்..

அந்த நண்பர்கள் கூட்டம் ஒரு தங்கைக்கு கல்யாணம் செய்யும் அண்ணன்களின் வேகத்தோடும் பூரிப்போடும் கூறப்பட்ட வேலைகளை எல்லாம் செய்தனர் .

முதல் சுற்று நீச்சல் போட்டியின் முடிவில் ஒரு வீராங்கனை தண்ணீரில் இருந்து நீச்சல் தளத்திலிருந்து கை ஊன்றி எழும் பொழுது , கை வழுக்கி திரும்பவும் நீரிலே விழுந்தாள்.

அதை பார்த்த அந்த வாலிபன் வேகமாய் சென்று கைக்கொடுத்து தூக்கி விட சென்ற பொழுது , அந்த வீராங்கனை அதை நிராகரித்து  திரும்பவும் மேலே ஏறி வந்தாள். 

வந்து சக்கர நாற்காலியில்  உட்கார்ந்தவுடன் அந்த வீராங்கனை வாலிபனிடம் கூறினாள்  

தங்கள் உதவிக்கு மிகவும் நன்றி .
    மன்னிக்கவும் அதை மறுத்ததற்கு.  
    
    அடுத்தவரின் உதவிக்கு அடிமையாய் வாழ்ந்த என்னை  
    விடுவித்து சுதந்திரமாய் இருக்க கற்றுக்கொடுத்தது 
    நீச்சல் ஆசிரியரும் இந்த போட்டியும் ,   

    கரையேற எனக்கு தெரியும்
    கால் இல்லாமை இருந்தும் 
    எனக்கொரு இன்னலும் இல்லை  
    
    நம்பிக்கையுடன் என் பின்னால்  நீ(ர்) நின்றால் 
    நீரிலும் நிற்பேன் கால் இல்லாமலும் 

    உங்கள் உதவி கரையேற தெரியாதவர்களை இங்க அழைத்து வருவது தான் அண்ணா.
"   
அதை கேட்டவுடன் இவ்வார்த்தைகள் எங்கேயோ கேட்டது போல் இருந்தது அவனுக்கு. 

அப்பொழுது  ஒரு சிறு குழந்தை அந்த  நீச்சல் குளத்திலே ஒரு காகித படகை விட்டது . 

கண்டதும் கேட்டதும் புரிய தொடங்கின. அவன் கண்கள் கலங்கின.


"நீரிலும் நிற்பேன் கால் இல்லாமலும்" 
என்று சொல்லியவள் 
கையை பிடித்துக்கொண்டு  
அழுகையில் 

அவன் கால்கள் அவன் கண்ணீரிலே நின்றன . 

யாருக்கு யார் உதவி செய்தாரென்று யாருக்கும் புரியவில்லை.

தந்தை இறந்த பொழுதும் வராத அந்த கண்ணீரும்  
அவன் தன்னை அறிந்தபொழுது வந்தது . 

உலகம் ஸ்தம்பித்தது.  

ஒரு சிறு தேடல் முடிவுக்கு வந்தது. 

https://www.sittruli.org/2016/12/


அத்தியாயம் - 3

நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமாய் அவன் அகம் விரிய தொடங்கின.   

மாற்று திறனாளிகளுக்கு விளையாட்டு நிலைமை பற்றி 

பேசினான் , தேடினான் , திட்டம்  தீட்டினான் 

அவனை போல் தேடல் உள்ளவர்களும் , குணவான்களும் அவனுக்கு நண்பர்கள் ஆனார்கள் .

கோவையில் சக்கர நாற்காலி கூடைப்பந்து  ஆட்டத்தை  பலருக்கு பயிர்ச்சி கொடுத்தனர் .

பலர் வாழ்க்கையை செதுக்குவதினால் , அமைப்பிற்கு சிற்றுளி என்று பெயரிட்டனர்.  

ஆடுகளம் வராவாராமும் ஆரவாரமுமாய் இருந்தது.

https://www.sittruli.org/

மாநில அளவில் பல பதக்கங்களை வீரர்கள் வென்றனர்.

https://www.sittruli.org/coimbatore-wcbb-attend-all-india-men-wheelchair-basketball-association-finals-blog-4/

தேசிய அளவில் மாநில அணியில் இடம்பெற்றும் பதக்கங்களை வென்றனர்.

https://www.sittruli.org/coimbatore-wcbb-attend-all-india-men-wheelchair-basketball-association-finals-blog-5/

வரும் ஆகஸ்ட்  17ஆம் தேதி 2019 அன்று இரண்டாம் வருட ஆண்டு நிறைவு.

அந்த நண்பர்கள் கூட்டத்தின் தற்பொழுதைய நீண்ட நாள் கனவு 


கோவையில் 
ஒரு பிரமாண்ட மாற்று திறனாளிகளுக்கான 
தங்கும் வசதி கொண்ட ஒரு பயிற்சி 
அகாடெமி 


கனவு விரிவாக்கம் ->   https://youtu.be/zPJgO7NFR6M?t=232


ஒருவனின் கடுந்தவம் ஒரு சிறிய சிற்பத்தில் முடியக்கூடாது .

தஞ்சை பெரிய கோயிலை ஒரு சோழ மன்னன் கனவு கண்டாலும் ,  ஆயிரம் சிற்பிகள் தேவைப்பட்டன .

உங்கள் ஒவ்வொருவரின் கை வேண்டும் ஒரு சிற்றுளியோடு.

 செதுக்குவோம் குணவான்களாக  
     கோவையில் 
மாற்று திறனாளிகளுக்கான  ஒரு பெரிய கோயில் ...

நம் சுதந்திர நேரத்தை பகிர்ந்தால் பலருக்கு வாழ்க்கையில் சுதந்திரம் கிடைக்கும் 


சுதந்திர 
நாள் நல் 
வாழ்த்துக்கள் .

பின்குறிப்பு  : 


1. இந்த கட்டுரை 
உண்மையையும் அமுதத் தமிழின் கற்பனையையும் 
கலந்து கொடுத்திருக்கிறேன் .  
காபியிலும் சிக்கரி இருந்தால் தான் சுவை இருக்கும் 
பலருக்கு.

2. இந்த கட்டுரையை  
எழுதியது 
பணத்தை  மற்றும் தங்க நாணயத்தை 
பார்த்து அல்ல 
       
இந்த சிற்றுளி நண்பர்கள் 
         அகத்தின் நாணயத்தைப் பார்த்து     





Wednesday, 14 August 2019

ஹ்ருதயனி




குழந்தை வேண்டுபவள்  அன்னை..
கொடுப்பது தெய்வம்..

பத்து மாதங்கள் தவம்..
கிடைத்து விட்டது வரம்..

தெய்வம் தங்குமிடம் ஹ்ருதயம்..
துடித்தால் தான் உயிர்..

ஹ்ருதயம் அந்த ஹரி ஆடும் தாயம் அல்லவா ???

தான் பெற்ற ஒரு பிஞ்சு நெஞ்சம் துடிக்கவில்லை என்றால் பதறுபவள் தாய்..

ஓராயிரம் நெஞ்சத் துடிப்பை பார்க்க ஓடுபவள் யார் ???

தெய்வத்தின் இருப்பிடத்தை சரிபார்ப்பவள் யார் ???

உயிரின் சத்தத்தை ஊடுருவி கேட்ப்பவள்  யார் ???

ஹ்ருதயனி என்று பெயரிட வேண்டியவளை


ஹரினி என்று பெயரிட்டனர்...

Happy birthday Harini


பின்குறிப்பு : எனது அக்கா ஹரினியின் பிறந்த நாளுக்கு இது சமர்ப்பணம் .
அவள் எதிரொலி மருத்துவ தொழில்நுட்பத்தை பிறந்த குழந்தைகளின் இருதயத்தில் செலுத்தி அதன் வளர்ச்சியையும் செயல்திறனையும் கணிக்கிறாள். 

PS : This write up was my present to My cousin sister Harini for her birthday. 
She works as a Senior Echo technician and conducts echo cardiography tests for just born to 5 day old kids daily. 













Saturday, 10 August 2019

The Event that a night Sky saw



Chaos was the only order in that house .


Words cannot describe the level of Chaos nor any scientific formulae can quantify it .


Making an order out of chaos is sometimes more chaotic than Chaos itself.


"This is not done. Array ya you did not even do that. Oh my god you are so slow in completing all these. There is so much more to do " came from a strong voice..


There was a long list of incomplete things that was mentioned in her discourse. It ended up with


" Its Damn Scary "


" Beautiful you are " came the reply.


Her eyes lit like a blazing sun and before she decided to burn him by focussing , he held her hand and took  her to rooftop terrace like a cloud pulling over hot sun to cool the earth.


When she was trying to move away in anger, he pulled her towards him and gave her a kiss.


By the time his lips got separated from her PINKy cheek, his cheek got a kiss from her hand with a big sound.


She yelled "A NO means NO".


When she was hurrying to leave him , he pulled her hands and said " Sorry " and went near her


Her Yelling continued.

"Amidst whole a lot of things to be done and when am listing the details, you just gaze at me say that am beautiful " .


By putting his head down and a tear at the corner of his eye, he asked her to just spend ten minutes with him.


He understood the approval from her eyes.


He went and lied down on the floor by stretching his left hand facing the sky.


After a while, once her mercury level dropped she came down and lied down next to him laying her head on the left bisceps.


There was a deep and uneasy silence for sometime.


She asked him "Generally you stretch your right hand. I think this is the first time you stretched your left hand. Why So ? "


He replied " Always you were right. Today what is left of me is only you and if so, i am right "


She replies " A word play can win a moment but not an entirety"


She then asked in a calm way " OK Amidst a whole a lot of work to be done and when am listing the details you just gaze at me and say that am beautiful "


He raised his hands towards the sky " What do you see ? "








She replied " A beautiful night sky lit with full moon and infinite stars "


He replied " hmmm hmmm "


She then counter questioned " What do you see then? "


He replied " Today there is overall less light pollution  I see the planets moon, jupiter and mars in the north, east and center of the sky respectively.

Today the betelgeuse star looks more prominent in the orion constellation. The sagittarius constellation has your star see there. There is going to be a ISS going in another half an hour at the speed of the 1000km/hr fomr the east to west. We could see that in the app and it might take the photo of our place when its passing. We might come there too " and went with more astronomical details.


She started yawning and was about to sleep.


He replied " Hey why are you sleeping . This is so much interesting"


She told " instead of seeing the beautiful sky and its contents as a wholesome ONE , you just make it boring and worse by detailing each one "


He started laughing voraciously with a few coughs in between.


She pinched his hip and replied " i am taking a dig at you. Why are you laughing at me . have you gone mad " ?


He said " Are you taking a dig at me ? Really ?? Think O Lady at least once " .

And then his laugh started waning to a smile causing a confused silence for her.


It took a long while for her to realize...



The she got immersed herself in a ocean of shy and started laughing. 


As she was laughing she rose above and kissed him on his forehead and then laid her head on his chest holding him tighter than ever before.


" While i was kissing your cheek, a part of the skin was about to come inside my mouth." While he was saying the above there was sound of some one walking up the steps to the terrace.



..

..

..

..

..

..

..



A 27 year old boy came and said " Hey Grandpa and grandma , my dad and mom asked you to come down. As there is dew, you both might get cold and keep coughing in the homam tomorrow. They asked you to continue your romance tomorrow on 80th wedding anniversary(Sadabhishekam) first night. "



The grandpa grumbled " You naughty fellows, i never disturb when you talk to your would be but you guys will never allow me to spend some peaceful time with my wife ".


He then stood up with difficulty and also lifted her with great effort.


Their walk continued with stumbling legs, but with loving heart than ever before.


The Sky was gifted to have seen this event.



Vara Lakshmi Vratham


A boatman was rowing a boat to drop a passenger to other side of the river Bank.

There was a deep  silence in the river with just the sounds of paddle's struggle through the water.

The boatman broke the silence with a conversation. 

"May i know about you Sir and where are you going? " 

"I am a trader going back home from far off land" 

Boatman continued "So how's your trade going on. Are you going back home after a successful trade?" 

The reply came back " I am not yer that successful. I had to go in between to my home town because of a festival. I got command to attend it compulsorily"

The boatman slowed the paddling speed and said "hmmm. So are you not happy in going home then "    

Came the reply " Festival is vara maha lakshmi vratham and it seems that today Goddess Lakshmi comes home. So i have to be there to bless my wife. Am not sure when Goddess herself comes why I need to go? Moreover i had to leave my business in between which is itself Lakshmi right? "




The boatsman laughed and said " So looks like you are feeling as if you are compelled to drink water from a plastic bottle when you are in the boat crossing the Ganges."

The trader wasn't amused by the remark and his face frowned.

The boatman understood it and kept quiet. 

Then started a period of very uneasy silence.

After a while 
the boatman sang a song 

"  is the one who blesses is God 
OR 
the one who seeks blessings. 

Is the one who seeks blessings the gifted. 
OR
the one who imparts blessing to the one who seek it

is Lakshmi 
the one in money 
OR 
the idol where she's expected to descend  
OR 
the one who earns and performs a pooja for the arrival of lakshmi. 

OR 
the pooja is performed by her only because she's Lakshmi herself .

Many rivers start from a mountain.
Many questions start from the mind... 


Row yourself in silence to reach the truth ... "


After a while , the trader looks into eyes of boatman with folded hands. 

Then again 
there was a deep silence with 

the boat reaching his destination ....







காசியில் ஓர் நாள்

ஊடுருவியிருந்தன என் கால்கள் 
செழிற்பிற்கு பெயர் போன 
ஆற்று 

மண் இல்,


இடுப்பளவிற்கு  புரண்டு கொண்டே என்னை தணிக்கும்  கங்கையின்

புணல் ,


நிற்கும் என்னை அடித்துத் தூக்கும் ஆடிக் 

காற்று , 


கைகளை தூக்கி கூப்பினாலும்  தொடமுடியாத பரந்த விரிந்த 

ஆகாசம் , 


இயற்கையின் பிரம்மாண்டத்தை  தலைவணங்கும் பொழுது என் மனதின் ஓயாத தேடலின் 
ஆறாத தீயும் 
இன்று

 ஆரத்  தீ ... 


சங்கமம்.. 

மாலைப் பொழுதில்  
இரவும் பகலும்
சங்கமம் ..

பிண்டத்திலும் அண்டத்திலும் 
பஞ்ச பூதத்தின் 
சங்கமம்...

மனதில்
தேடலும் தேடியவையும் 
சங்கமம்...

உலகத்தில் 
இயக்குபவையும் இயங்குபவயின் 
சங்கமம்...

உயிரிலே 

'கட' ந்தும்
 'உள்' ளும்
சங்கமம்...

காசியில் ஓர் நாள் ..





காவிரி


காகத்தால் பிறந்தவளை
கானகத்தில் துள்ளி வந்தவளை
கழனியை ஊட்டி வளர்த்தவளை 
தன்னுடன் இனணத்துக்கொள்ள 
கடல் வாய் விரித்துக் கொண்ட நாட்டில்..  

ஒரு துளிக்காக வாய் விரித்துக் கொண்டிருக்கிறோம் 

மண்ணில் மறைந்ததால் 
விண்ணை நோக்கி..



படகோட்டி - 1

ஒரு ஞானி படகிலே  ஆற்றின் மற்றொரு கரை சென்று கொண்டிருந்தார். 

அருமையான ஆழமான நிசப்தம் நிலவியது. 

அது கலையும் விதமாக படகோட்டி ஞானியைப் பார்த்து சொர்க்கத்தை பற்றி தெரியுமா என்று கேட்டார்.. 

தெரியும் என்று பதில் வந்தது. 

நீங்கள் அதைப் பற்றி விவரிக்க வேண்டும் என்று கேட்டார்.

ஞானி பாடினார் 

"சொர்கத்தை விவரிக்க முடியுமா ??

சொற்களாய் கூறினால் அது சொர்க்கம் ஆகுமோ??

சொற்களாய் கூறினால் அது  சொற்பமாய் போகுமா ??

வார்த்தைகளை கேட்டாலும்  வாழ்ந்தால்தான் புரியுமோ ??

அண்டம் அளவு தெரிந்தாலும் ஒரு அனுபவதிற்கு ஈடாகுமோ ?? "

படகோட்டி "கம்முனுரு சாமி எனக்கு செர்க்கமாய் இருக்கம்" என்று கோவமாய் கூறினான்.. 

ஞானி படேர் என்று சிரித்தார்... 

படகோட்டிக்கு  புரியவில்லை..

சிறிது நேரம் கழித்து படகோட்டியும் சிரித்தார்... 

சிரிக்கும் பொழுதே ஞானியை பார்த்து கும்பிட்டார்.. 

நிசப்தம் மீண்டும் நிலவியது ..

இம்முறை  ஞானத்தோடு







பின்குறிப்பு :

படகோட்டி  செர்க்கமாய் என்று கூறியதில் சொற்பிழை இருப்பினும் கதைக்கு இன்னொரு பொருள் தருகிறது. 

இல்லையென்றால் சொர்கமாய் என்றே எடுத்துக்கொள்ளவும் 



காசியில் சிவசக்தி


காசியில் ஒரு படகில் தம்பதியினரை எல்லா காட்(Ghat-> படித்துறை ) டிற்கும் அழைத்து சென்றான்..

ஒவ்வொரு காட் பக்கமும் சென்று அங்கு நீரை தலையிலே தெளித்து கொள்ள சொன்னான் படகோட்டி ...

அவர்களும் அவ்வாறே செய்து வந்தனர் ...

நாரதர் காட் பக்கம் மட்டும் செல்ல வில்லை ...

தம்பதி கேட்டதற்கு இங்கு குளித்தால் வீட்டிற்கு சென்றவுடன் உங்களுக்குள் சண்டை வருமென்றார்...

கேட்டவுடன் மனைவி சிரித்தாள்...

படகு யாத்திரை முடிவில் படகோட்டி கேட்டதைவிட அந்த கணவன் பணம் குறைவாக குடுத்தான்.

படகோட்டி கூறினான் "காசியின் அருளால் சிவசக்தி போல வாழ்வீர்கள்" என்றான் ...

கணவர் கூறினார் " இப்பவே அப்படிதான் இருக்கிறோம்..  தினமும் 'சக்தி'யுடன் கத்துவா.. நான் 'சிவனே'னு தான் இருப்பேன்"என்று ...

மனைவி முறைத்தாள் ...

சத்தம் பெருகிற்று ...

படகோட்டி சிரித்துக் கொண்டே சென்று விட்டான் ...

அன்று வீணையுடன் வந்தவன் ...
இன்று இரு துடுப்புடன் வந்தான் ...

அவன் பின்வரும் பாடலை பாட ஆரம்பித்தான்

"கலங்கிய மனமும் தெளியும்
கலங்கா கங்கையில் கலந்தால்  ..."

பாட்டும்,
பாடுபவனும்,
படகும்,

மெல்ல மெல்ல ,

மெல்ல மெல்ல ,

வளரும் இரவில்

ஒரு குன்றும் ஒளியாய் கலந்தது ...



மொட்டை மாடியில் ஒரு இரவு



களேபரமாய் ஒரு வீடு...

கூச்சலும் குழப்பமுமாய் ...

ஒரு குறல் பின்வருமாறு ஒளித்துக் கொண்டிருந்தது

" இதை முடிக்கவில்லை அதை முடிக்கவில்லை  இன்னும் இவ்வளவு செய்ய வேண்டும் .... "

மெதுவாய் செய்வோம் என்று பதில் வந்தது..

அவள் கூறினால்

" பயமாய் இருக்கிறது"

"அழகாய் இருக்கிறாய்" என்று பதில் வந்தது ...

அதைக் கேட்டு அவள் கண்ணில் மோதல் பார்வை முற்றுவதற்குள் அவன் காதல் பார்வையால் அவள் கையைப் பிடித்து கூட்டிச்  சென்றான்

மொட்டை மாடிக்கு ...

தள்ளிப் போக துடிக்கும் அவளை கிட்டே இழுத்து  அவள் கண்ணத்தில் இட்டான் ஒரு முத்தம் ...

உதடுகள் கண்ணத்தை பிரிவதற்குள்
அவன் கண்ணத்தை முத்தமிட்டது அவளது கை சற்று பலாரென்று...

"A No means No " ...

கீழே செல்ல ஆயத்தப்பட்ட அவளிடம், கையைப் பிடித்து Sorry .. இங்கே வா என்றான்...

ஆயிரம் வேலை இருக்கும் இடத்தில் உனக்கு என் அழகு தான் தெரிகிறதோ...

பத்து நிமிடம் இங்கே எனக்காக இரு என்று கண்ணைச் சுருக்கி கேட்டுக் கொண்டான்...

அவள் சரி என்று பார்வையிலேயே கூறினாள்...

அவன் சென்று தரையில் தன் இடக்கையை விரித்து வானத்தைப் பார்த்து படுத்துக் கொண்டான்...

சற்று நேரம் கழித்து அவள் அவன் இடக்கையில் தன் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள்...

ஒரு அமைதியற்ற அமைதி நிலவியது...

சற்று நேரம் கழித்து ஏன் இன்று நீங்கள் இடக்கையை விரித்தீர்கள் என்றாள்...

என்
இடம்
நீ வந்தால் உன்னையே சுற்றி நான்
வலம்
வருவேன் என்றான்...

உன் வார்த்தை விளையாட்டுக்கு குறைவில்லை ...

மீண்டும் கேட்டாள் இம்முறை நிதானத்தோடு
" ஆயிரம் வேலை இருக்கும் இடத்தில் உனக்கு என் அழகு தான் தெரிகிறதோ...  "
அவன் கையை மேலே நீட்டி  கூறினான் ..

அங்கே திருவாதிரை நட்சத்திரம் தெரிகிறது..
இங்கே குரு மற்றும் அங்கே செவ்வாய் கிரகம் தெரிகிறது .. அங்கே பார் தேள்  விண்மீன் தெரிகிறது ..
மற்றும் அங்கே சிம்மம் தெரிகிறது .. பௌர்ணமி வெளிச்சம் அற்புதமாய் ...
என்று கூறிக் கொண்டே இருக்கையில் அவள் கொட்டாவி விட்டாள்..

அவன் கேட்டான் உனக்கு பிடிக்கவில்லையா என்று..

சரி உனக்கு என்ன தான் தெரிகிறது என்றான்..

அவள் அழகான இரவு வானம் மட்டும் தான் தெரிகிறது என்றாள்..

நீ தான் தேவையில்லாமல் தனித்தனியாய் பார்த்து ஒரு அழகை அலுப்பு தட்டு வைக்கிறாய்  ...

அவன் பலமாக சிரித்தான் ... அவள் உன்னை சொன்னதற்கு எதற்கு சிரிக்காய் என்றாள் ...

என்னைத்தான் சொன்னாயா என்றான் ??

பலமாக சிரித்துக் கொண்டே இருந்தான் சில இரும்பல் கலந்து...
...
...
....
...
...
....

பல நேரம் கழித்து தான் அவளுக்கு புரிந்தது. வெட்கத்தோடு சிரித்துக் கொண்டே அவன் நெற்றியில் முத்தமிட்டு அவன் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டாள்...

நான் முத்தமிடும் போது  உன் கண்ணத்தின் சதை என் வாயோடு வந்துவிட்டது என அவன் கூறிக்கொண்டிருந்த பொழுது

படிக்கட்டில் ஒரு சிறுவன் ஓடிவந்து கூறினான் "தாத்த பாட்டி உங்களை கீழே  வந்து படுக்க சொல்றாங்க அப்பா.. கொட்டுகிற  பனில சலிப்பிடித்துக் கொள்ளுமாம்... உங்கள் காதலை நாளைக்கு என்பதாம் கல்யாணம் முதல் ராத்திரியில் தொடர சொல்கிறார்கள்"

என் பொண்டியுடன் கொஞ்ச நேரம் விட மாட்டீர்களே என்று திட்டிக் கொண்டே சிரமத்துடன் அவன் சிரமத்துடன் எழுந்து அவளையும் கையை பிடித்து எழுப்பி

பிறகு நடந்து சென்றனர்

தள்ளாடி ...

இந்த பூமியின்
இரு நட்சத்திரங்களை
அந்த வானம்
பார்த்துக்கொண்டிருந்தது  ...




இயற்கை


வற்றிய மண்ணைப் பார்த்து
கண்ணீரிலும் தண்ணீர் இல்லாமல்
துயரப்பட்ட நிலையில்,

நில்லாமல் கதறி அழும் வானத்தின்
கண்ணீரிலே மிதக்கிறோம்

நெஞ்சம் துணிந்தும்
மனம் விரிந்தும்
நாம் கை கோர்த்தால்

இயற்கையும் இனிக்கும்

என்றென்றும் ...

People walk through the flooded roads

Crave Divine

  Eyes fully opened   Pitch dark all around Nose so long Feeling very light  Couldn't move hands  could only flap All alone   Centre of ...