காட்சி 1 சுந்தர் வீடு
2020 செப்டம்பர் 1 செவ்வாய் கிழமை காலை 10 மணி .
சமையல் அறையில் சுறுசுறுப்பாய் வேலை செய்து கொண்டிருந்தான் சுந்தர். வயது 40 . அவனிடம் ஓடி வந்து அவன் மகன் கேட்டான் " அப்பா எனக்கு ஒரு கதை போட்டி இருக்கிறது . " ஒரு வரி பல கதை " இது தான் தலைப்பு நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் ".
" போடா எனக்கு வேல இருக்கு உங்க அம்மாவும் ஆஸ்திரேலியா ஷிஃப்ட் னு காலையிலே டப்பாவை திறந்திட்டு உட்கார்ந்துட்டா . எனக்கு இன்னும் 1 மணி நேரத்துல மீட்டிங் . சமைச்சி முடிக்கணும். எதையாவச்சு கதைனு கிறுக்கி தொலை ." என்றான் சுந்தர் கடுகடுவென்று.
அந்த 12 வயது பாலகன் தலையை தொங்கபோட்டுக்கொண்டு தன் Online class கு சென்றான்.
காட்சி 2 சுந்தர் வீடு
செப்டம்பர் 1 செவ்வாய் கிழமைமதியம் 1 மணி .
சுந்தர் , அவன் மனைவி சுசிலா, மகன் அரவிந்த் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். டிங் டாங் டிங் டாங் Calling Bell ஒலித்தது . சுசிலா சென்று கதவை திறந்தாள். வந்தது வனிதா . அங்கு 5 வருடமாக வேலைசெய்து வந்த பணிப்பெண் .
சுசிலா : " வா மா வனிதா ."
வனிதா : " Lockdown முடிஞ்சிடுச்சு. இனிமேல் வேலைக்கு வரலாம் தானே மா ? நிறைய எடத்துல என்ன வேலைக்கு வர வேண்டாம் னு சொல்லிட்டாங்க. கடைசி 6 மாசம் நீங்க மட்டும் தான் என்ன பார்த்துக்குறீங்க. நீங்க சம்பளம் மாச மாசம் குடுத்துறீங்க . ஆனா நா வேலை செய்யாம சாப்பிட ரொம்ப கஷ்டமா இருக்கு. " சொல்லி அழுதுட்டாள்.
அது உள்ளே இருந்த சுந்தர் மற்றும் அரவிந்த் காதுகளில் விழுந்தது . சுந்தர் வேகமாக வீட்டின் வெளியே சென்று , "அழாதே வனிதா , நீ வரக்கூடாது னு நாங்க சொன்னது உன் நல்லதுக்கு . நீ இப்பவே உள்ளே சென்று வேலையை தொடங்கு" என்றான்.
வனிதா முதல் முறையாக பற்கள் முளைத்த குழந்தைபோல் பளிச்சென்று ஒரு சிரிப்பு.
காதலனை காண செல்லும் பெண்ணை போல் ஒரு உற்சாகத்துடன் சமையல் அறைக்கு சென்று பாத்திரம் தேய்த்தாள்.
சுசிலா கை கழுவ எழுந்தாள் . சுந்தர் " என்ன சரியாவே நீ சாப்பிடல " என்றான் . சுசிலா " எனக்கு போதும். " என்றாள் . சுந்தர் அவளை பார்த்து " காலை எழுந்து கடல் அளவு வேலை செய்து சமைத்தால் கடுகு போல சாப்பிடுகிறாய் " என்று கோபித்து கொண்டான் . சுசிலா "எனக்கு அடுத்த meeting இருக்கு" என்று ஓடினாள்.
அரவிந்த் சுந்தரை பார்த்து பயந்து இன்னும் இரண்டு கரண்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டான் .
சாப்பிட்டவுடன் அரவிந்த் கடைக்கு செல்ல வேண்டும் என்றான் சுந்தரிடம் . சுந்தர் " Mask போட்டுக் கொண்டு போ" என்றான்.
வனிதா வும் வேலை முடித்திவிட்டு சென்றாள் .
வீட்டிற்கு வெளியே வந்ததும் , அரவிந்தைப் பார்த்தாள் .
அரவிந்த் " வனிதா அக்கா. பாஸ்கர் எப்படி இருக்கான் பார்த்து மாசங்கள் ஆகிவிட்டது . நானும் உங்க வீட்டுக்கு வரேன் "
வனிதா "சரி வா அரவிந்த் ".
காட்சி 3. வனிதா வீடு .
வனிதா ஒரு சிறிய வீட்டில் இருந்தாள் . 15 வயதில் கல்யாணம் . அடுத்த வருடமே குழந்தை . பாஸ்கர் . அவனுக்கு இப்பொழுது 8 வயது ஆகிறது . வனிதா புருஷன் மகேஷ் . ஒரு குடிகார சோம்பேறி . இந்த இரண்டு பழக்கங்களில் ஒன்று இருந்தாலே வாழக்கை கஷ்டம் . இரண்டும் இருந்தால் குட்டிசெவுரு தான் . பாவம் வனிதா. அவள் தான் குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள் . பல வீடுகளிலும் பத்து பாத்திரங்களை தேய்த்து வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருக்கிறாள். அரசு பள்ளியில் பாஸ்கர் படிக்கிறான் .
பாஸ்கரும் அரவிந்தும் மாடிக்கு சென்று விளையாடினார்கள் . திடீரென்று ஒரு சத்தம் வந்தது . இருவரும் கீழே ஓடி வந்தனர் .
மகேஷ் சாப்பாடு தட்டை தூக்கி எறிந்தான் "எங்கே எனது சரக்கு பாட்டில் . ஒளிச்சுவெச்சு விளையாடுறயா ? "
வனிதா கண்களில் நெருப்பு புனல் வழிந்தது , அவள் கண்களில் இருந்து வந்த துளிகள் தரையை சுட்டெரித்தது . " வேலைக்கு போக வக்கில்லை . பாஸ்கர் பிறந்த நாளுக்கு துணி வாங்க வைத்திருந்த காசை எடுத்து குடிப்பதற்கு திருடிவிட்டு உனக்கு கோவம் வேற " என்று கூறிக்கொண்டே ஒளித்து வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து உடைத்தாள் .
மகேஷ் கோவத்தில் அடிக்க கை ஓங்கிய போது , வனிதா பக்கத்தில் இருந்த அரிவாள்மனையை எடுத்து அவன் கழுத்தில் வைத்தாள் " நான் கடல் அளவு வேலை செய்தால் தான் கடுகளவு சாப்பிட முடிகிறது . அந்த சாப்பாட்டையும் தூக்கி எறிந்து விட்டாய் . எனக்கு கழுத்தை நீட்டவும் தெறியும் , வேண்டுமென்றால் கழுத்தை சீவவும் தெரியும் ." என்று சீறினாள் ..
மகேஷ் நடுங்கினான் . வனிதாவுக்கு அப்படியே கோவம் குறைந்து அழுகை பீறிட்டது.
கீழே டம்மென்று உட்கார்ந்தாள் . " பாஸ்கர்க்கு இன்னும் இரண்டு நாளில் பிறந்த நாள். என்ன செய்யப்போகிறேனோ " என்று விம்மி விம்மி அழுதாள் .
மகேஷ் உயிருக்கு பயந்து சட்டை கூட போடாமல் ஓடிவிட்டான் .
இதை கேட்ட பாஸ்கர் அம்மாவிடம் ஓடி சென்று கட்டி பிடித்தான் . எனக்கு புது dress எல்லாம் வேண்டாம் . நீ அழாதே மா . நீ தான் எனக்கு வேணும், அப்பா வேண்டாம்.
வீட்டிற்க்கு வெளியே நின்ற அரவிந்திற்கு கண்களில் நீர் வழிந்தது .
காட்சி 4. செப்டம்பர் 3. வியாழ கிழமை வனிதா வீடு .
பாஸ்கர் பிறந்த நாள்.குளித்து விட்டு வந்த அவனை விபூதி வைத்து முத்தமிட்டாள். பழைய ஆடையை எடுத்து அவனுக்கு போடும் போது அவள் இதயம் நொறுங்கியது . இருப்பினும் வெளியே காண்பிக்காமல் அணிவித்தாள் .
" பாஸ்கர் யாரு மா இங்க " என்று குரல் கேட்டது . வெளியே சென்று பார்த்தாள் . பிளிப்கார்ட் டெலிவரி பாய் . பார்சல் எடுத்து கொடுத்தான் . வனிதா கேட்டாள் "நாங்கள் ஏதும் ஆர்டர் செய்ய வில்லையே என்று "
அது எனக்கு தெரியாது மா . இந்த address than potrukku. வாங்கி கொள்ளவும். என்றான் எனக்கு நிறைய delivery irukku. குடுத்து விட்டு சென்றான்.
வனிதா வாங்கி பிரித்தாள். உள்ளே புத்தம் புது ஆடை. Shirt மட்டும் pant. அவளுக்கு புரிய வில்லை.. ஒரு card இருந்தது " happy birthday bhasker. உழைப்பும் வீரமும் கொண்ட அம்மா கிடைத்ததற்கு எங்கள் வாழ்த்துக்கள். "
காட்சி 5: சுந்தர் வீடு
சுந்தர் mobile phone அலறியது.. Phone எடுத்தான் "hello who is this? " என்றான்.
" நான் principal தர்மலிங்கம் பேசுகிறேன். நீங்கள் நலமா".
சுந்தர் பதறியடித்து ஒன்றும் புரியாமல் " சொல்லுங்க sir. Am fine. Neenga epdi irukeenga. அரவிந்த் வழக்கம் போல குறும்பு எதாவது செய்தானா? "
" ஏன் sir, மகன் மேல அவ்வளவு நம்பிக்கை யா? குறும்பு செய்தால் தானே சிறுவன். நீங்க actual ah avana நெனச்சு பெரும படனும். அவனோட கவனம், யோசிக்கும் திறன், மனிதாபிமானம் வேற லெவல் ல இருக்கு.. i வாஸ் dumbstruck."
சுந்தர்" புரியிற மாதிரி சொல்லுங்க sir"
தர்மலிங்கம் தொடர்ந்தார் " ஒரு கதை போட்டி நடத்தினோம். " ஒரு வரி இரு பல கதை " அதுல நிறைய மாணவர்கள் கதை எழுதினார்கள். உங்க மகன் எழுத மட்டும் செய்யல, அதற்கு ஒரு படி மேலே போய், அதை படிப்பவர்களும் கதையில் வர மாதிரி செஞ்சு அவர்களையும் நல்லது செய்ய வைக்கிற மாதிரி ஒரு checkmate செய்தான். எனக்கு நான் கதை படிப்பவனா இல்லை. கதையில் ஒரு பாத்திரமாக மாற்றினான். அவனுக்கு முதல் பரிசும் கிடைத்துள்ளது . அதை நாங்கள் அடுத்த வாரம் தான் அறிவிப்போம். படித்தவுடன் அவன் நினைத்ததை முடித்துவிட்டேன். உங்களிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நன்றாக வளர்த்து இருக்கிறீர்கள் . "
சுந்தர் " மிகவும் நன்றி சார் . நான் என் மகனிடம் நீங்கள் கூறியதை நான் சொல்லலை.எனக்கு அந்த கதை மட்டும் அனுப்புங்க. நான் படிக்கிறேன் ."
10 நிமிடம் பிறகு சசுந்தருக்கு ஈமெயில் வந்தது . அதை படித்தான் .
கதையில் காட்சி 1, காட்சி 2, காட்சி 3, காட்சி 4 இடம் பெற்றுஇருந்தது அதற்கு பிறகு முடிவுரை எழுந்திருந்தான் அரவிந்த் . பின்வருமாறு
"Lockdown இல் அனைவரும் ஒவ்வொரு விதமாக பாதிக்க பட்டிருக்கிறோம். இங்கு நாம் இரண்டு வீடுகள் பார்த்திருக்கிறோம் . இரண்டு வீட்டிலும் சில பிரச்னைகள் .
சுந்தர், வானதி . இருவரும் கடல் போல வேலைசெய்கிறார்கள் . கடுகளவு தான் பலன் கிடைத்திருக்கிறது.
வானதியின் பலனும் சுந்தரின் பலனும் வீணடிக்க பட்டிருக்கிறது .
ஆனால் அதன் விளைவின் வீரியம் வெவ்வேறு .
சுந்தருக்கு அது ஒரு நாள் வீண் . வானதிக்கு ஒரு மாதம் வீண் .
பிறந்த நாள் பரிசை இழந்த ஒரு குழந்தை மனம் , அது ஒரு வருடம் வரை வடுவாகி இருக்கும் . "
ஒரு வரி இரு கதை ....
இந்த காட்சி 4 நடக்க வேண்டும் என்றால் அந்த கொரியர் அனுப்பியவர் நீங்களாக தான் இருக்க வேண்டும் .
அந்த பரிசு உங்களுக்கு ஒரு கடுகுபோல் உழைப்பு .
பாஸ்கருக்கு அது கடல் போல இன்பம்.
Lockdown என்பது நம் உடலுக்கு தான் உள்ளத்திற்கு அல்ல என்பது என் அபிப்ராயம் .
நன்றி "
அதில் பாஸ்கரின் address உம் அவனது pant மற்றும் ஷர்ட் size உம் இருந்தது.
படித்தவுடன் சுந்தர் கண்களில் கண்ணீர் . மீட்டிங் முடித்துவிட்டு வந்த சுசிலா சுந்தரை பார்த்து திடுக்கிட்டாள் . நடந்தது தெரிந்து அவளும் mail ஐ படித்தாள் .
அவள் படிக்கும் பொழுது அவன் மொபைல் எடுத்து ஏதோ செய்துகொண்டிருந்தான் .
காட்சி 6 :
வனிதா மொபைலிற்கு ஒரு மெசேஜ் வந்தது .
" இந்த கொரோன பாதிப்புகள் முடிந்தவுடன் நீ வேலைக்கு வாந்தால் போதும். உன் கடைசி 6 மாதம் சம்பளத்தை நான் உன் bank account இல் போட்டுவிட்டேன் " அனுப்பியது சுந்தர் .
காட்சி 7: சுசீலா சுந்தரை பார்த்து கூறினாள் "ஒரு கதையை நீங்கள் உண்மை ஆக்கி விட்டீர்கள். காட்சி 2 ஒரு பொய். அவளுக்கு நாம் ஆறு மாதம் சம்பளம் தரவில்லை. நம் மகன் நம் மானத்தை காப்பாற்றி அறிவால் பாடம் புகட்டி விட்டான். "

