ஊடுருவியிருந்தன என் கால்கள்
செழிற்பிற்கு பெயர் போன
ஆற்று
மண் இல்,
இடுப்பளவிற்கு புரண்டு கொண்டே என்னை தணிக்கும் கங்கையின்
புணல் ,
நிற்கும் என்னை அடித்துத் தூக்கும் ஆடிக்
காற்று ,
கைகளை தூக்கி கூப்பினாலும் தொடமுடியாத பரந்த விரிந்த
ஆகாசம் ,
இயற்கையின் பிரம்மாண்டத்தை தலைவணங்கும் பொழுது என் மனதின் ஓயாத தேடலின்
ஆறாத தீயும்
இன்று
ஆரத் தீ ...
சங்கமம்..
மாலைப் பொழுதில்
இரவும் பகலும்
சங்கமம் ..
பிண்டத்திலும் அண்டத்திலும்
பஞ்ச பூதத்தின்
சங்கமம்...
மனதில்
தேடலும் தேடியவையும்
சங்கமம்...
உலகத்தில்
இயக்குபவையும் இயங்குபவயின்
சங்கமம்...
உயிரிலே
'கட' ந்தும்
'உள்' ளும்
சங்கமம்...
காசியில் ஓர் நாள் ..
செழிற்பிற்கு பெயர் போன
ஆற்று
மண் இல்,
இடுப்பளவிற்கு புரண்டு கொண்டே என்னை தணிக்கும் கங்கையின்
புணல் ,
நிற்கும் என்னை அடித்துத் தூக்கும் ஆடிக்
காற்று ,
கைகளை தூக்கி கூப்பினாலும் தொடமுடியாத பரந்த விரிந்த
ஆகாசம் ,
இயற்கையின் பிரம்மாண்டத்தை தலைவணங்கும் பொழுது என் மனதின் ஓயாத தேடலின்
ஆறாத தீயும்
இன்று
ஆரத் தீ ...
சங்கமம்..
மாலைப் பொழுதில்
இரவும் பகலும்
சங்கமம் ..
பிண்டத்திலும் அண்டத்திலும்
பஞ்ச பூதத்தின்
சங்கமம்...
மனதில்
தேடலும் தேடியவையும்
சங்கமம்...
உலகத்தில்
இயக்குபவையும் இயங்குபவயின்
சங்கமம்...
உயிரிலே
'கட' ந்தும்
'உள்' ளும்
சங்கமம்...
காசியில் ஓர் நாள் ..

No comments:
Post a Comment