ஒரு ஞானி படகிலே ஆற்றின் மற்றொரு கரை சென்று கொண்டிருந்தார்.
அருமையான ஆழமான நிசப்தம் நிலவியது.
அது கலையும் விதமாக படகோட்டி ஞானியைப் பார்த்து சொர்க்கத்தை பற்றி தெரியுமா என்று கேட்டார்..
தெரியும் என்று பதில் வந்தது.
நீங்கள் அதைப் பற்றி விவரிக்க வேண்டும் என்று கேட்டார்.
ஞானி பாடினார்
"சொர்கத்தை விவரிக்க முடியுமா ??
சொற்களாய் கூறினால் அது சொர்க்கம் ஆகுமோ??
சொற்களாய் கூறினால் அது சொற்பமாய் போகுமா ??
வார்த்தைகளை கேட்டாலும் வாழ்ந்தால்தான் புரியுமோ ??
அண்டம் அளவு தெரிந்தாலும் ஒரு அனுபவதிற்கு ஈடாகுமோ ?? "
படகோட்டி "கம்முனுரு சாமி எனக்கு செர்க்கமாய் இருக்கம்" என்று கோவமாய் கூறினான்..
ஞானி படேர் என்று சிரித்தார்...
படகோட்டிக்கு புரியவில்லை..
சிறிது நேரம் கழித்து படகோட்டியும் சிரித்தார்...
சிரிக்கும் பொழுதே ஞானியை பார்த்து கும்பிட்டார்..
நிசப்தம் மீண்டும் நிலவியது ..
இம்முறை ஞானத்தோடு
பின்குறிப்பு :
படகோட்டி செர்க்கமாய் என்று கூறியதில் சொற்பிழை இருப்பினும் கதைக்கு இன்னொரு பொருள் தருகிறது.
இல்லையென்றால் சொர்கமாய் என்றே எடுத்துக்கொள்ளவும்

No comments:
Post a Comment