காசியில் ஒரு படகில் தம்பதியினரை எல்லா காட்(Ghat-> படித்துறை ) டிற்கும் அழைத்து சென்றான்..
ஒவ்வொரு காட் பக்கமும் சென்று அங்கு நீரை தலையிலே தெளித்து கொள்ள சொன்னான் படகோட்டி ...
அவர்களும் அவ்வாறே செய்து வந்தனர் ...
நாரதர் காட் பக்கம் மட்டும் செல்ல வில்லை ...
தம்பதி கேட்டதற்கு இங்கு குளித்தால் வீட்டிற்கு சென்றவுடன் உங்களுக்குள் சண்டை வருமென்றார்...
கேட்டவுடன் மனைவி சிரித்தாள்...
படகு யாத்திரை முடிவில் படகோட்டி கேட்டதைவிட அந்த கணவன் பணம் குறைவாக குடுத்தான்.
படகோட்டி கூறினான் "காசியின் அருளால் சிவசக்தி போல வாழ்வீர்கள்" என்றான் ...
கணவர் கூறினார் " இப்பவே அப்படிதான் இருக்கிறோம்.. தினமும் 'சக்தி'யுடன் கத்துவா.. நான் 'சிவனே'னு தான் இருப்பேன்"என்று ...
மனைவி முறைத்தாள் ...
சத்தம் பெருகிற்று ...
படகோட்டி சிரித்துக் கொண்டே சென்று விட்டான் ...
அன்று வீணையுடன் வந்தவன் ...
இன்று இரு துடுப்புடன் வந்தான் ...
அவன் பின்வரும் பாடலை பாட ஆரம்பித்தான்
"கலங்கிய மனமும் தெளியும்
கலங்கா கங்கையில் கலந்தால் ..."
பாட்டும்,
பாடுபவனும்,
படகும்,
மெல்ல மெல்ல ,
மெல்ல மெல்ல ,
வளரும் இரவில்
ஒரு குன்றும் ஒளியாய் கலந்தது ...

No comments:
Post a Comment