Colours of Life

Colours of Life
Stories of Life which we fail to see and feel

Thursday, 15 August 2019

தேடலும் சுதந்திரமும் சிற்றுளியும்



அத்தியாயம் - 1



2016 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் .

பொள்ளாச்சி அருகே ஒரு ஆற்றங்கரை ஓரம் உட்கார்ந்து கொண்டிருந்தான் ஒரு வாலிபன்.

ஆற்றில் நீர் சீராக ஓடிக்கொண்டிருந்தது. 

அந்த ரம்யமான காட்சியை முழுமையாக ரசிக்க முடியாமல் 
நீண்ட யோசனையோடு இருந்தான் அவன்.

படகோட்டி 

ஏய் தம்பி தனியாக உட்கார்ந்துகொண்டிருக்கிறாய் . நீ காலையிலே வேறு ஒரு படகிலே இந்த பக்கம் வந்தாய்  என்று அந்த  படகோட்டி கூறினான். உன்னை கூட்டிச்  செல்ல தான் வந்திருக்கிறேன். படகிலே ஏறு . இன்னும் சற்று நேரத்தில் மழை வந்துவிடும் போல் இருக்கிறது. அந்த பக்கம் செல்ல இது தான் கடைசி படகு. இனி நாளை தான் படகு சவாரி. மழையில் அந்த மகேசன் கூப்பிட்டாலும் எந்த படகும் வராது.   "  

என்று படகிலே வந்துகொண்டிருந்த  படகோட்டி கூறினான்.

ஏற மனமில்லாமல் ஏறினான் படகில். 

சவாரி ஆரம்பித்தது.  

படகோட்டி:
" ஏனப்பா அப்படி இருக்கிறாய் ? ஆறடி உயரம் முழுதும் துயரமாய் இருக்கிறாயே  ? "

அவன்:   
"துயரம் இல்லை. ஒரு தேடலின் தோல்வி  

படகோட்டி:   
" தேடும் பொருளின் இடம் தெரியவில்லையா 
அல்லது  
தேடலின் முயற்சி முடிந்ததா ? "

அவன்:      
" இரண்டும் இல்லை. தேடல் அகத்திலே. 
பொருள் எதுவென்று தெரியவில்லை . "

படகோட்டி:  
" தம்பி நான் அவ்வளவா படிக்காதவன். 
கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்களேன். "

அவன்

" அன்பாய் அம்மா
ஆதரவாய் மனைவி...
அருளாய் குழந்தை..
அழகாய் குடும்பம்...
அருமையான ஊர்...
உண்மையான் நண்பர்கள்...

நல்ல வேலை... 
போதுமான அளவு சம்பளம்..

காண வேண்டிய இடத்திற்கு பறந்து கூட்டிச் செல்ல கார்...

உறுதியான உடல்... 
தினமும் வெகு தூரம் காலையில் ஓடும் கால்கள்...

இன்னொரு உயிரின் துயரை பார்த்த உடன் 
துடிக்கும் இதயம்... 
கரையும் மனம்...

இவை எல்லாம் இருந்தும் 
ஏதோ குறைகிறது...

என்னுடைய ஒவ்வொரு வார இறுதியும் 
இந்த சமுதாயத்திற்கு ஒரு புது தொடக்கமாய் இருக்க 
கடவுளின் தாயமாய் உழைப்பு ...

இவை எல்லாம் செய்தும்
ஏதோ குறைகிறது...

தினமும் அதை தேடித்துக்கொண்டிருக்கும் மனம் ...

ஆழ்ந்த அமைதியிலும் அந்த நெருடல் தொடர்கிறது ...

எங்கு சென்றும் 
எவ்வித தியானத்திலும் 
எவ்வித உழைப்பிலும் 

அது அகப்படவில்லை

இல்லாத ஒன்றைத்  தேடிக்கொண்டிருக்கின்றேனா ??  

அப்பொருள் யாதென காணாமல் வாழ்க்கை முழுதும் தேடலாய் தான் இருக்குமோ ??  "

என்று கூறிக்கொண்டிருந்த பொழுதே 

படகோட்டி  
" தம்பி தம்பி நிறுத்துப்பா "
 என்று படகை ஆற்றின் நடுவிலே நிறுத்தினார்.

நீ தொடர்ந்து பேசியதில் எனக்கே மூச்சு வாங்கிவிட்டது".

வானம் கருக ஆரம்பித்தது. 

ஒரு பாடலுடன் படகை ஓட்டினான்  
"
இல்லாமை இல்லாமல் இவ்வுலகம் கிடையாது.

இல்லாமை இல்லாமல் நீ இருந்தும் , 

அதற்கு அடிமையாகாமல் போனாயே.

சுதந்திரமாய் நீ இருந்தும் மாயையின் தந்திரத்தால் சுருங்குகிறாயே .

சிற்றின்பத்தில்  நீ சிக்காமலும் பெரும் குழப்பம் அடைகிறாயே.

தேடல் தவத்தின் கடுமையை பொறுத்தே வரம் இருக்குமோ  ?

உன் தேடலின் வரம் ஒரு சிறு சிற்பம் என்றால் தகுமோ ?

கோயிலாய் வந்தால் அதை செதுக்க உன் இரு கைகள் போதுமோ  ? 

ஆயிரம் கைகள் வருமுன் உன் தலை சீராகுமோ  ?


அனைவரையும் கரை சேர்க்கும் என்னை எவன் கரை சேர்ப்பானோ.

உன்னை கண்டு நானும் குழம்பலானேனே .. 
"

அவன் அந்த பாட்டை குறுக்கிட்டு 
தெரியாதவனை கரை சேர்க்கும் உனக்கு 
நின் கரை தெரியாதா.
"

அதை கேட்ட படகோட்டி பின்வரும் வரிகளை பாடினான் மூன்று முறை . 


கரை சேர்க்கும் வேலை செய்வதால் தான் நான் அதனின் அடிமையோ 

அல்லது
     
    சுதந்திரமாய் நான் இருப்பதால்தான் மற்றவரை கரை சேர்க்கின்றேனோ  ? 
"

அந்த வாலிபன் அதை புரிந்து கொள்வதற்குள் கரை சேர்ந்தான் ..

இறங்க மனமில்லாமல் இறங்கினான் கரையில்... 

அவன் படகோட்டியிடம்  பணம் கொடுத்தான். 

பணத்தை சிரித்துக்கொண்டே  அந்த படகோட்டி வாங்கி  
"
       எண்ணிக்கை வேண்டாம் எனக்கு நின்  
       எண்ணங்கள் மட்டும் போதும் .

       தனவான்கள் நிரம்பிய இவ்வுலகிற்கு 
       குணவான்கள் தேவை நின் போல
 "
என்று பணத்தை அவன் சட்டை பாக்கெட்டில் வைத்தான்.

திரும்பவும் படகேறி பாடிக்கொண்டே கிளம்பினான் 


"   அனைவரையும் கரை சேர்க்கும் என்னை 
எவன் கரை சேர்ப்பானோ ....
"

அந்த பாட்டொலி மழையொலியில் கரைந்துகொண்டே சென்றது ...

அத்தியாயம் - 2

அதன் பிறகு சில மாதங்களுக்கு பிறகு அந்த வாலிபனும் சில நண்பர்களும் டீ கடையில் ஒரு செய்தித்தாழில் ஒரு சிறு விளம்பரம் பார்த்தனர் .

"தன்னார்வலர்கள் தேவை . தேனியில் நடைபெறும்  
Paralympic Swimming Competition – 2016
மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி 2016. 
"

சேவை என்றதும் அந்த நண்பர்கள் கூட்டம் வெல்லத்தைக்  கண்ட எறும்புகள் போல சுறுசுறுப்பாய் விண்ணப்பித்து சென்றனர்.

அந்த போட்டியின் போது கால், கை  குறைபாடுள்ளவர்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர்..

அந்த நண்பர்கள் கூட்டம் ஒரு தங்கைக்கு கல்யாணம் செய்யும் அண்ணன்களின் வேகத்தோடும் பூரிப்போடும் கூறப்பட்ட வேலைகளை எல்லாம் செய்தனர் .

முதல் சுற்று நீச்சல் போட்டியின் முடிவில் ஒரு வீராங்கனை தண்ணீரில் இருந்து நீச்சல் தளத்திலிருந்து கை ஊன்றி எழும் பொழுது , கை வழுக்கி திரும்பவும் நீரிலே விழுந்தாள்.

அதை பார்த்த அந்த வாலிபன் வேகமாய் சென்று கைக்கொடுத்து தூக்கி விட சென்ற பொழுது , அந்த வீராங்கனை அதை நிராகரித்து  திரும்பவும் மேலே ஏறி வந்தாள். 

வந்து சக்கர நாற்காலியில்  உட்கார்ந்தவுடன் அந்த வீராங்கனை வாலிபனிடம் கூறினாள்  

தங்கள் உதவிக்கு மிகவும் நன்றி .
    மன்னிக்கவும் அதை மறுத்ததற்கு.  
    
    அடுத்தவரின் உதவிக்கு அடிமையாய் வாழ்ந்த என்னை  
    விடுவித்து சுதந்திரமாய் இருக்க கற்றுக்கொடுத்தது 
    நீச்சல் ஆசிரியரும் இந்த போட்டியும் ,   

    கரையேற எனக்கு தெரியும்
    கால் இல்லாமை இருந்தும் 
    எனக்கொரு இன்னலும் இல்லை  
    
    நம்பிக்கையுடன் என் பின்னால்  நீ(ர்) நின்றால் 
    நீரிலும் நிற்பேன் கால் இல்லாமலும் 

    உங்கள் உதவி கரையேற தெரியாதவர்களை இங்க அழைத்து வருவது தான் அண்ணா.
"   
அதை கேட்டவுடன் இவ்வார்த்தைகள் எங்கேயோ கேட்டது போல் இருந்தது அவனுக்கு. 

அப்பொழுது  ஒரு சிறு குழந்தை அந்த  நீச்சல் குளத்திலே ஒரு காகித படகை விட்டது . 

கண்டதும் கேட்டதும் புரிய தொடங்கின. அவன் கண்கள் கலங்கின.


"நீரிலும் நிற்பேன் கால் இல்லாமலும்" 
என்று சொல்லியவள் 
கையை பிடித்துக்கொண்டு  
அழுகையில் 

அவன் கால்கள் அவன் கண்ணீரிலே நின்றன . 

யாருக்கு யார் உதவி செய்தாரென்று யாருக்கும் புரியவில்லை.

தந்தை இறந்த பொழுதும் வராத அந்த கண்ணீரும்  
அவன் தன்னை அறிந்தபொழுது வந்தது . 

உலகம் ஸ்தம்பித்தது.  

ஒரு சிறு தேடல் முடிவுக்கு வந்தது. 

https://www.sittruli.org/2016/12/


அத்தியாயம் - 3

நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமாய் அவன் அகம் விரிய தொடங்கின.   

மாற்று திறனாளிகளுக்கு விளையாட்டு நிலைமை பற்றி 

பேசினான் , தேடினான் , திட்டம்  தீட்டினான் 

அவனை போல் தேடல் உள்ளவர்களும் , குணவான்களும் அவனுக்கு நண்பர்கள் ஆனார்கள் .

கோவையில் சக்கர நாற்காலி கூடைப்பந்து  ஆட்டத்தை  பலருக்கு பயிர்ச்சி கொடுத்தனர் .

பலர் வாழ்க்கையை செதுக்குவதினால் , அமைப்பிற்கு சிற்றுளி என்று பெயரிட்டனர்.  

ஆடுகளம் வராவாராமும் ஆரவாரமுமாய் இருந்தது.

https://www.sittruli.org/

மாநில அளவில் பல பதக்கங்களை வீரர்கள் வென்றனர்.

https://www.sittruli.org/coimbatore-wcbb-attend-all-india-men-wheelchair-basketball-association-finals-blog-4/

தேசிய அளவில் மாநில அணியில் இடம்பெற்றும் பதக்கங்களை வென்றனர்.

https://www.sittruli.org/coimbatore-wcbb-attend-all-india-men-wheelchair-basketball-association-finals-blog-5/

வரும் ஆகஸ்ட்  17ஆம் தேதி 2019 அன்று இரண்டாம் வருட ஆண்டு நிறைவு.

அந்த நண்பர்கள் கூட்டத்தின் தற்பொழுதைய நீண்ட நாள் கனவு 


கோவையில் 
ஒரு பிரமாண்ட மாற்று திறனாளிகளுக்கான 
தங்கும் வசதி கொண்ட ஒரு பயிற்சி 
அகாடெமி 


கனவு விரிவாக்கம் ->   https://youtu.be/zPJgO7NFR6M?t=232


ஒருவனின் கடுந்தவம் ஒரு சிறிய சிற்பத்தில் முடியக்கூடாது .

தஞ்சை பெரிய கோயிலை ஒரு சோழ மன்னன் கனவு கண்டாலும் ,  ஆயிரம் சிற்பிகள் தேவைப்பட்டன .

உங்கள் ஒவ்வொருவரின் கை வேண்டும் ஒரு சிற்றுளியோடு.

 செதுக்குவோம் குணவான்களாக  
     கோவையில் 
மாற்று திறனாளிகளுக்கான  ஒரு பெரிய கோயில் ...

நம் சுதந்திர நேரத்தை பகிர்ந்தால் பலருக்கு வாழ்க்கையில் சுதந்திரம் கிடைக்கும் 


சுதந்திர 
நாள் நல் 
வாழ்த்துக்கள் .

பின்குறிப்பு  : 


1. இந்த கட்டுரை 
உண்மையையும் அமுதத் தமிழின் கற்பனையையும் 
கலந்து கொடுத்திருக்கிறேன் .  
காபியிலும் சிக்கரி இருந்தால் தான் சுவை இருக்கும் 
பலருக்கு.

2. இந்த கட்டுரையை  
எழுதியது 
பணத்தை  மற்றும் தங்க நாணயத்தை 
பார்த்து அல்ல 
       
இந்த சிற்றுளி நண்பர்கள் 
         அகத்தின் நாணயத்தைப் பார்த்து     





No comments:

Post a Comment

Crave Divine

  Eyes fully opened   Pitch dark all around Nose so long Feeling very light  Couldn't move hands  could only flap All alone   Centre of ...