களேபரமாய் ஒரு வீடு...
கூச்சலும் குழப்பமுமாய் ...
ஒரு குறல் பின்வருமாறு ஒளித்துக் கொண்டிருந்தது
" இதை முடிக்கவில்லை அதை முடிக்கவில்லை இன்னும் இவ்வளவு செய்ய வேண்டும் .... "
மெதுவாய் செய்வோம் என்று பதில் வந்தது..
அவள் கூறினால்
" பயமாய் இருக்கிறது"
"அழகாய் இருக்கிறாய்" என்று பதில் வந்தது ...
அதைக் கேட்டு அவள் கண்ணில் மோதல் பார்வை முற்றுவதற்குள் அவன் காதல் பார்வையால் அவள் கையைப் பிடித்து கூட்டிச் சென்றான்
மொட்டை மாடிக்கு ...
தள்ளிப் போக துடிக்கும் அவளை கிட்டே இழுத்து அவள் கண்ணத்தில் இட்டான் ஒரு முத்தம் ...
உதடுகள் கண்ணத்தை பிரிவதற்குள்
அவன் கண்ணத்தை முத்தமிட்டது அவளது கை சற்று பலாரென்று...
"A No means No " ...
கீழே செல்ல ஆயத்தப்பட்ட அவளிடம், கையைப் பிடித்து Sorry .. இங்கே வா என்றான்...
ஆயிரம் வேலை இருக்கும் இடத்தில் உனக்கு என் அழகு தான் தெரிகிறதோ...
பத்து நிமிடம் இங்கே எனக்காக இரு என்று கண்ணைச் சுருக்கி கேட்டுக் கொண்டான்...
அவள் சரி என்று பார்வையிலேயே கூறினாள்...
அவன் சென்று தரையில் தன் இடக்கையை விரித்து வானத்தைப் பார்த்து படுத்துக் கொண்டான்...
சற்று நேரம் கழித்து அவள் அவன் இடக்கையில் தன் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள்...
ஒரு அமைதியற்ற அமைதி நிலவியது...
சற்று நேரம் கழித்து ஏன் இன்று நீங்கள் இடக்கையை விரித்தீர்கள் என்றாள்...
என்
இடம்
நீ வந்தால் உன்னையே சுற்றி நான்
வலம்
வருவேன் என்றான்...
உன் வார்த்தை விளையாட்டுக்கு குறைவில்லை ...
மீண்டும் கேட்டாள் இம்முறை நிதானத்தோடு
" ஆயிரம் வேலை இருக்கும் இடத்தில் உனக்கு என் அழகு தான் தெரிகிறதோ... "
அவன் கையை மேலே நீட்டி கூறினான் ..
அங்கே திருவாதிரை நட்சத்திரம் தெரிகிறது..
இங்கே குரு மற்றும் அங்கே செவ்வாய் கிரகம் தெரிகிறது .. அங்கே பார் தேள் விண்மீன் தெரிகிறது ..
மற்றும் அங்கே சிம்மம் தெரிகிறது .. பௌர்ணமி வெளிச்சம் அற்புதமாய் ...
என்று கூறிக் கொண்டே இருக்கையில் அவள் கொட்டாவி விட்டாள்..
அவன் கேட்டான் உனக்கு பிடிக்கவில்லையா என்று..
சரி உனக்கு என்ன தான் தெரிகிறது என்றான்..
அவள் அழகான இரவு வானம் மட்டும் தான் தெரிகிறது என்றாள்..
நீ தான் தேவையில்லாமல் தனித்தனியாய் பார்த்து ஒரு அழகை அலுப்பு தட்டு வைக்கிறாய் ...
அவன் பலமாக சிரித்தான் ... அவள் உன்னை சொன்னதற்கு எதற்கு சிரிக்காய் என்றாள் ...
என்னைத்தான் சொன்னாயா என்றான் ??
பலமாக சிரித்துக் கொண்டே இருந்தான் சில இரும்பல் கலந்து...
...
...
....
...
...
....
பல நேரம் கழித்து தான் அவளுக்கு புரிந்தது. வெட்கத்தோடு சிரித்துக் கொண்டே அவன் நெற்றியில் முத்தமிட்டு அவன் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டாள்...
நான் முத்தமிடும் போது உன் கண்ணத்தின் சதை என் வாயோடு வந்துவிட்டது என அவன் கூறிக்கொண்டிருந்த பொழுது
படிக்கட்டில் ஒரு சிறுவன் ஓடிவந்து கூறினான் "தாத்த பாட்டி உங்களை கீழே வந்து படுக்க சொல்றாங்க அப்பா.. கொட்டுகிற பனில சலிப்பிடித்துக் கொள்ளுமாம்... உங்கள் காதலை நாளைக்கு என்பதாம் கல்யாணம் முதல் ராத்திரியில் தொடர சொல்கிறார்கள்"
என் பொண்டியுடன் கொஞ்ச நேரம் விட மாட்டீர்களே என்று திட்டிக் கொண்டே சிரமத்துடன் அவன் சிரமத்துடன் எழுந்து அவளையும் கையை பிடித்து எழுப்பி
பிறகு நடந்து சென்றனர்
தள்ளாடி ...
இந்த பூமியின்
இரு நட்சத்திரங்களை
அந்த வானம்
பார்த்துக்கொண்டிருந்தது ...

No comments:
Post a Comment